84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
World

செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள்!

இரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை செளதிக்கு விற்க அனுமதி தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவ்வாறாக ஆயுதம் விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.

ஆனால், இரான் விவகாரத்தை காரணம் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுகிறது. நேரடியாக ட்ரம்பே இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இதற்கு சில ஜனநாயகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

அதுபோல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்படும் என கூறி உள்ளார். ஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.

Related posts

தெரீசா மே விலகல்- பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது!

BPC Tamil

தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டார்!

admin

39 நாடுகளின் விசா சலுகை தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

admin

Leave a Comment