82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
World

ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதிக் குழுவும் ஐ.நாவின் பொருளாதாரச் சமூக விவகாரப் பணியகமும்!

ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதிக் குழுவும் ஐ.நாவின் பொருளாதாரச் சமூக விவகாரப் பணியகமும் 18ஆம் நாள் நியூயார்கில், “காளான் தொழில் நுட்பம்:ஐ.நாவின் 2030 தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு உயர் நிலைக் கூட்டத்தை நடத்தின.

ஐ.நாவின் தலைமைப் பொருளியலாளர் ஹாலிஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் 73ஆவது ஐ.நா பேரவைத் தலைவர் உள்ளிட்ட பல ஐ.நா அமைப்புகளின் தலைவர்களும் சில நாடுகளின் பிரதிநிதிகளும் ஆக சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்கும் போக்கில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முக்கிய பங்காற்றியுள்ளதை அவர்கள் இக்கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினர்.

காளான் தொழில் நுட்பம் சீனாவில் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள பல நாடுகளில் வறுமை ஒழிப்பு, சூழலமைப்புப் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகிய துறைகளில் இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புக் கலந்தாய்வு ஆணையத்தின் கூட்டம் 19ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது!

admin

எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?

BPC Tamil

மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய -நாய்

BPC Tamil

Leave a Comment