84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
World

ஈரானுக்கு போர் வேண்டுமென்றால் அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும்-எச்சரிக்கை அமெரிக்கா.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அத்துடன் ஈரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து ஈரானை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் வளைகுடா பகுதியில் கூடுதல் போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிபர் டிரம்ப், இரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடமாட்டோம் என்றும் ஆனால், அந்நாட்டுடன் எந்த சண்டையையும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

“எனக்கு போர் செய்ய எந்த விருப்பமும் இல்லை. ஏனெனில் போர் பொருளாதாரங்களை பாதிக்கும். முக்கியமாக போர் மக்களை கொல்லும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஈரான் நாட்டு உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா தடை – பின்னணி என்ன?
ஈரானுக்கு விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பியது அமெரிக்கா
இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றங்களை தணிக்கும் விதமாக இரானும் சற்று இறங்கி வந்தது. அமெரிக்காவுடன் போர் நடத்தும் எண்ணம் இல்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதிபர் டிரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சாரிஃப், “அலெக்சாண்டர், செங்கிஸ் கான் போன்ற மற்ற படையெடுப்பாளர்கள் செய்ய முடியாததை டிரம்ப் செய்ய முடியும் என்று நினைக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த பதற்றங்கள்?
2015ஆம் ஆண்டு சர்வதேச அணுஆயுத ஒப்பந்தத்தை கைவிட்டு, அணுஆயுதங்களுக்கான யுரேனியத்தை மீண்டும் தயாரிக்கப் போவதாக இரான் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்தது.

இரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தினால், அந்நாட்டின் மீதான தடைகள் நீக்கப்படும் என்ற இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகிக்கொண்டது.

ஒப்பந்தத்தில் குறைபாடுள்ளதாகக் கூறி இதிலிருந்து விலகிய டிரம்ப், மீண்டும் ஈரான் மீது தடைகளை விதித்தார்.

Related posts

கழுகுப் படத்தால் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்!

BPC Tamil

எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?

BPC Tamil

ஏப்ரல் 20ஆம் நாள் இரவு சீனாவின் சி ட்சாங் செயற்கைக் கோள் மையத்தில்!

admin

Leave a Comment