82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
World

இஸ்தான்புல்லில் மறுதேர்தல் துருக்கியில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து.

மார்ச் மாதம் அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற நிலையில், இஸ்தான்புல் மாநகர உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்த துருக்கியின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்ற தேர்தலில் மோசடிகளும், ஊழலும் நடைபெற்றதாக கூறி, சிஹெச்பி என்கிற எதிர்க்கட்சி நூலிழையில் வென்றதை துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்துவானின் ஏகே கட்சி ஏற்றுகொள்ளவில்லை.

“தேர்தலை மீண்டும் நடத்தயிருப்பது, ஏகே கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெறுவது சட்டபூர்வமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று சிஹெச்பி-யின் துணை தலைவர் அனுர்சால் அடிகுசெலர் கூறியுள்ளார்.

துருக்கியின் மிக பெரிய நகரத்தில் மறுதேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

சில தேர்தல் அதிகாரிகள் அரசு ஊழியர்களாக இல்லாமலும், தேர்தல் முடிவின் சில ஆவணங்கள் கையெழுத்திடப்படாமலும் இருந்ததால் மறுதேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திலுள்ள ஏகே கட்சியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இத்தகைய முடிவு “அப்பட்டமான சர்வாதிகாரம்” என்று அடிகுசெலர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு மக்களின் விருப்பதற்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும், ஜனநாயக அல்லது நியாயமான சட்டத்தை புறக்கணிப்பதாகவும் அமைகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

சிஹெச்பி-யின் வேட்பாளரான எக்ரெம் இமாமோக்லு இஸ்தான்புல்லின் மேயராக இருப்பார் என்று அதிகாரிகள் அதிகாரபூர்வமாக ஏப்ரல் மாதம் உறுதி செய்தனர்.

சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான உரையில், இந்த தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் ஆளும் கட்சியினரால் தூண்டி விடப்பட்டதாக கூறி, இஸ்தான்புல்லில் மறுதேர்தல் நடத்த தேர்தல் வாரியம் உத்திரவிட்டிருப்பதை அவர் கண்டித்துள்ளார்.

Related posts

ஈரானுடன் போர் நடத்த அமெரிக்கா- விரும்பவில்லை!

BPC Tamil

அனைத்து மொழிகளும் விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்.

BPC Tamil

சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு!

BPC Tamil

Leave a Comment