84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
sports Uncategorized

2 நிமிடத்தில் விற்றுத் தீர்த்த ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு!

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான அனைத்து இணையத்தளமூடான நுழைவுச் சீட்டுகளும் 2 நிமிடங்களில் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஆசன வசதியுள்ளது. இந்திய ரூபாவில் ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை 9 வகையிலான நுழைவுச்சீட்டுகள் உள்ளன.

இந் நிலையில் இணைத்தளமூடான நுழைவுச் சீட்டு விற்பனையாது ஈவெண்ட்ஸ் நவ் என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் அந்த நிறுவனம் இணையத்தளமூடான ‍அனைத்து நுழைவுச் சீட்டுக்களையும் 2 நிமிடங்களில் விற்றுத் தீர்த்துவிட்டதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பை கேள்வியுற்ற ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுடன், கள்ளச்சந்தை நுழைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

இன்று (12) ஐபி எல் இறுதி ஆட்டம்: உட்சாக மழையில் ரசிகர்கள்.

BPC Tamil

சூடு பிடிக்கும் இந்திய மக்களவை தேர்தல் ! ஆறாம் கட்ட வாக்கெடுப்பு இன்று,

BPC Tamil

ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

admin

Leave a Comment