84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
India Uncategorized

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!

இந்தியா : சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்றும் வரும் இந்த சிறப்பு பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளின் வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற போது, முதன்முறையாக வி.வி.பேட் என்கிற ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

அதன்படி, வாக்கு எண்ணிக் நடைபெறும் போது ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை எண்ண வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான இந்த பயிற்சிகள் இந்த சிறப்பு முகாமில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த பணியில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி, இணை தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன!

BPC Tamil

விமான நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுகிறது!

admin

நரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் வழிபாடு !

BPC Tamil

Leave a Comment