84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
Tech

செயற்கை நுண்ணறிவே போதும்..!

வீட்டு வேலை, சர்வர் வேலை, மருத்துவர் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த ரோபோக்கள் இன்று கட்டுமானத் துறைக்கும் வந்துவிட்டன. வெளிநாடுகளில் கட்டுமானத்துறையில் ரோபோக்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ‘ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களும் கட்டுமானப் பணிகளில் புதிய வரவாக வரத் தொடங்கியுள்ளன. 

வெளிநாடுகளைப் பொறுத்தவரை பள்ளம் தோண்டுவதற்காக முதன்முதலில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. அஸ்திவாரத்துக்கு நிலத்தைத் தோண்டுவதற்கு அதிகமான  நாட்களும் மனிதவளமும் தேவைப்படும் என்பதால் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மனித வளம் தேவை குறைந்தது; கால விரயமும் குறைந்தது. இதனைத் தொடர்ந்து  பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டமைப்பதில் ரோபோக்களும்  அங்கமாயின. இந்தப் பணிகள் தவிர இதர கட்டுமானப் பணிகளிலும்கூட ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. 

Related posts

ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

admin

நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள்!

admin

5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்!

admin

Leave a Comment