84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
sports

மும்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது – சென்னையை வீழ்த்தி

மூன்றாவது தடவையாகவும் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

132 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட மும்பை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டீகொக் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட முற்பட்ட போது முதல் ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ரோகித் சர்மா 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க டீகொக்கும் 3.2 ஆவது ஓவரில் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் மும்பை அணியின் முதல் இரு விக்கெட்டுக்களும் 21 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

3 ஆவது விக்கெட்டுக்காக இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடிசேர்ந்தாட மும்பை அணி 8 ஓவரின் முடிவில் 54 ஓட்டங்களையும், 14.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் கடந்தது.

எனினும் அந்த ஓவரின் ஐந்தவாது பந்து வீச்சில் இஷான் கிஷன் 28 ஓட்டத்துடனும், அடுத்து வந்த குருநல் பாண்டியா டக்கவுட் முறையிலும் அந்த ஓவரின் இறுதிப் பந்திலும் ஆட்டமிழந்து வெளியேறினர் (101-4).

தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஜோடிசேர்ந்தாட மும்பை அணி 18.3 ஆவது ஓவரில் சென்னை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் சூரியகுமார் யாதவ் 71 ஓட்டத்துடனும், பாண்டியா 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர் மற்றும் ஹர்பஜன்சிங் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றிகொண்டுள்ளதுடன், இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்!

admin

தூக்கி எறியப்பட்ட சீனியர் வீரர்.. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய கேகேஆர்!

admin

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப்!

admin

Leave a Comment