84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
sports

ஆஸி. வீரர் ஸ்டொனிஸ்ஸிற்கு கற்றுக்கொடுத்த மலிங்க!

லசித் மலிங்க அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மார்க்ஸ் ஸ்டொனிஸ்ஸிற்கு பந்தின் வேகத்தை எவ்வாறு குறைத்து வீசுவது எனக் கற்றுக் கொடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது https://youtu.be/XBCe5xya6Ik.

உலகக் கிண்ணத் தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் மலிங்க விளையாட வேண்டும் என்ற காரணத்தினால் அவருக்கு இப் பயிற்சிப் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அவுஸ்திரேலிய அணியுடான நேற்றைய போட்டியின் போது இலங்கை அணியுடன் இணைந்திருந்த மாலிங்க, போட்டியின் பின்னர் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மார்க்ஸ் ஸ்டொய்னிஸிற்கு பந்தின் வேகத்தை எவ்வாறு குறைத்து வீசுவது சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.

உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்னர், மாலிங்க இவ்வாறு எதிரணி வீரருக்கு பந்து வீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாலிங்க தெரிவிக்கையில்,

“மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் குறைந்த வேகத்தில் பந்துகளை வீசும் திறன் மிக முக்கியம். மார்க்ஸ் ஸ்டொய்னிஸ், ஐ.பி.எல். தொடரின் போதும், நான் எவ்வாறு குறைந்த வேகத்தில் பந்து வீசுகிறேன் என தெரிந்துக்கொள்ள விரும்பினார்.

இன்று அவருக்கு சில நுணுக்கங்களை பயிற்றுவித்தேன். இவ்வாறு நாம் செயற்படுவதன் ஊடாக சர்வதேச கிரிக்கெட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியும். பந்து வீச்சு சம்பந்தமாக யார் என்னிடம் உதவிகளை கேட்டாலும் முடிந்த வரை உதவிகளை செய்வேன்.

Related posts

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப்!

admin

2 நிமிடத்தில் விற்றுத் தீர்த்த ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு!

BPC Tamil

சன்ரைசர்ஸ் அணியும் கேகேஆர் அணியும்!

admin

Leave a Comment